close
முகப்புஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி கே.சிவன் நியமனம்

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி கே.சிவன் நியமனம்

January 10, 2018 210Views
இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி கே.சிவன் நியமனம்

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த  விஞ்ஞானியான கே.சிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தலைவராக உள்ள ஏ.எஸ்.கிரண் குமார் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு கே.சிவன் 3 ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தற்போது கே.சிவன் விக்ரம் சாராபாய் விண்வெளித் துறையின் செயலளாராக உள்ளார். 

கே.சிவன் எம்.ஐ.டி கல்விநிறுவனத்தில் கடந்த 1980ம் ஆண்டு ஏரோ நாட்டிக்கல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர். 1982ம் ஆண்டு இஸ்ரோவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் ராக்கெட் உருவாக்க குழுவில் இணைந்தார். இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடதக்கது.