ஈரான் முன்னாள் அதிபர் காலமானார்

share on:
Classic

ஈரான் முன்னாள் அதிபர் அலி அக்பர் ஹஷேமி ரஃப்ஸன்ஜனி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.

1989 ஆகஸ்டு 3ஆம் தேதி ஈரானின் நான்காவது அதிபராக பதவியேற்ற ரஃப்ஸன்ஜனி சிறந்த சீர்திருத்தவாதியாக திகழ்ந்தார். 1997ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த இவர், முன்னணி ராணுவ வீரராக வலம் வந்ததுடன், ஈரான் - ஈராக் போரிலும் கலந்துகொண்டு தேசத்திற்காக போராடினார்.

ராணுவ சேவைக்குப் பிறகு இவர் இஸ்லாமிய ஆலோசனை சபையின் உறுப்பினராகவும், நிபுணர்கள் சட்டமன்ற தலைவராகவும், நாடாளுமன்ற சபாநாயகராகவும் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ரஃப்ஸன்ஜனிக்கு அந்நாட்டு ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான 'ஆர்டர் ஆஃப் ஃபாத்:கிரேடு ஒன்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish