உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவு

share on:
Classic

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில்மாதவ் தவே, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளதாகவும், தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது தீர்ப்பிற்காக காத்திருக்க மட்டுமே அரசால் முடியும் என்றார்.

தீர்ப்பு வெளியானவுடன் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும், ஜல்லிக்கட்டு குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு தான் முற்றிலும் உடன்படுவதாகக் கூறினார். மேலும், ஜல்லிக்கட்டில் வன்முறை ஏதும் இல்லை என்றும், மத்திய அரசின் கைகள் தற்போது கட்டப்பட்டுள்ளதாகவும் அனில்மாதவ் தவே தெரிவித்தார்.

Loading...

jagadish