close
முகப்புஉச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் தேர்வு 

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் தேர்வு 

January 12, 2018 194Views
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் தேர்வு 

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரான இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார். 

பல்வேறு  உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் இவரை பரிந்துரைத்தது. 35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வரும் 61 வயதான இந்து மல்ஹோத்ரா, மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவரது தேர்வை மத்தியஅரசு ஏற்கும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகள் இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.