உதய் திட்டத்தில் இணைகிறது தமிழக அரசு

share on:
Classic

மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு முறைப்படி சேர்வதற்கான ஒப்பந்தம் வரும் 9 ஆம் தேதி கையெழுத்தாகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள உதய் எனப்படும் உஜ்வால் மின் விநியோக உறுதியளிப்புத் திட்டத்தில் திட்டத்தில் தமிழக அரசு இணைய உள்ளது. தொடக்கத்தில் உதய் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதன் விளைவாக உதய் திட்டம் தொடர்பான சந்தேகங்களை களைய மத்திய, மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டத்தில், வரும் திங்கட்கிழமை கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலாவதாக ஜார்க்கண்ட் மாநிலம் சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும் திட்டத்தில் சேர்ந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி மாநிலம் உதய் திட்டத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish