உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த இந்திய மூவர்ண கொடி

share on:
Classic

உலகின் மிக உயரமான கட்டிடங்களில் முதன்மையான துபாய் பூர்ஜ் காலிபா கட்டிடத்தில் இந்தியாவின் மூவர்ண கொடியை குறிக்கும் நிறங்களால் ஒளிர்ந்தது.

இந்தியாவின் 68வது குடியரசு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் கலந்துக்கொண்டார் .

இதனை குறிக்கும் வகையிலும் இருநாடுகளுக்கு இடையே இருக்கும் நல்லுறவை வெளிபடுத்தும் வகையிலும் பூர்ஜ் காலிபா கட்டிடத்தில் இந்திய கொடியின் மூவர்ண நிறங்கள் ஒளிர்ந்தன.

மிக உயரமான கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் மூவர்ண நிறங்கள் ஒளிர்வது பலரையும் கவர்ந்துள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடங்களில் முதலாவது இடத்தில் துபாய் பூர்ஜ் காலிபா கட்டிடமே முன்னனி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya