உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

share on:
Classic

உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவை நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தொடரில் 'பி' குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்திய நம்பிக்கை நட்சத்திரமான பி.வி சிந்து நேற்று தனது கடைசி லீக் போட்டியில் ரியோ ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியின் முதல் செட்டை 21-17 எனவும், இரண்டாவது செட்டை 21-13 என சிந்து அடுத்தடுத்து இரண்டு செட்களைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறினார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு, கடந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைக்கவிருந்த தங்கப்பதக்கத்தை தட்டிப் பறித்த கரோலினாவை சிந்து பழி தீர்த்துக்கொண்டார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் சிந்து, உலகின் 4ஆம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கவுள்ளார்.

Loading...

surya