உள்ளாட்சித்தேர்தல் : திமுக கூட்டணி - முதற்கட்ட வார்டுகள் பட்டியல்

share on:
Classic

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் விபரம் இன்று வெளியிடப்பட்டது. இதில் சேலம், திருச்சி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சியில் திமுக 54 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு வார்டிலும் போட்டியிடுகிறது.

திருச்சி மாநகராட்சியில் திமுக 62 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. திருச்சியின் முன்னாள் மேயரும், அதிமுக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் போட்டியிடும் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் திமுக 51 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும் போட்டியிடுகிறது.

Loading...

vaitheeswaran