உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி - ஜி.கே.வாசன் அதிரடி

share on:
Classic

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உள்ளாட்சித் தேர்தல் களத்தை தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண்டோம். அதனடிப்படையிலேயே தற்போது தனித்தே தேர்தலை சந்திக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் சம்பந்தமான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஜி.கே.வாசன், “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவே ஸ்டாலினை சந்தித்தேன்” என முகநூலில் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்து போட்டியிடப்போவதாக த.மா.கா சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

vaitheeswaran