உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் - தமிழிசை சௌந்திரராஜன்

share on:
Classic

தமிழகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி தனித்து போட்டியிடும் என பாஜகவின் தமிழக பொறுப்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும். அறவழியில் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் வன்முறை சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து கட்சி தலைவர்களும் பார்த்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் யாரும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ரஜினிகாந்த் இரண்டு மாநிலத்தின் மக்களுக்கு அறிமுகமானவர். எனவே அவர்கள் கருத்தை தெரிவித்தால் வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்காது என்பதே என் கருத்து.அவருக்கும் சில சமூக பொறுப்புகள் உள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெருவாரியாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும்.” என்றார்.

Loading...

vaitheeswaran