உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனு - கட்சிகள் அறிவிப்பு

share on:
Classic

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 23 ஆம் தேதி வரை தங்கள் விருப்பமனுக்களை அளிக்கலாம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்பமனுக்களை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை அளிக்கலாம் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 22 ஆம் தேதி வரை தங்கள் விருப்பமனுக்களை அளிக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று கடந்த மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்டோபர் மாதத்திற்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளது.

Loading...

vaitheeswaran