உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

share on:
Classic

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் இன்று வெளியானது.

அதில் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலு மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலை முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

இதில் சென்னையின் தற்போதைய மேயர் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திருச்சியின் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் திருச்சியில் 44வது வார்டில் போட்டியிடுகிறார், . மேலும், முன்னாள் எம்பி பாலகங்காவுக்கு சென்னை மாநகராட்சியில் 78வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்றிலிருந்து அக்டோபர் 3 ஆம் தேதிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.

Loading...

suresh