உள்ளாட்சித் தேர்தல் : சென்னை திமுகவில் 1194 பேர் விருப்பமனு

share on:
Classic

உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் இதுவரை 200 வார்டுகளுக்கு 1194 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர்கள் தங்களது விருப்பமனுக்களை சமர்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்சென்னையின் தெற்குப்பகுதியில் உள்ள 54 வார்டுகளில் 300 பேரும், தென் சென்னையின் மேற்குப்பகுதியில் உள்ள 50 வார்டுகளுக்கு 342 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வடசென்னையின் கிழக்குப் பகுதியில் உள்ள 44 வார்டுகளில் 250 பேரும் வடசென்னையின் வடக்குப்பகுதியில் உள்ள 53 வார்டுகளுக்கு 302 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்சென்னையின் தெற்குப்பகுதியில் உள்ள 53வார்டுகளில் 45 வார்டுகளில் திமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது என்பதால், இந்த ஆண்டும் அது தொடருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

suresh