ஊழல்வாதிகள் தூக்கமின்றி தவிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்

share on:
Classic

ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் அறிவிப்பால் ஊழல்வாதிகள், வரி ஏய்ப்பவர்கள் தூக்கமின்றி தவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் காஸிப்பூர் நகரில் ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதன்பின் மக்களிடம் பேசிய மோடி, 1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய வீர் அப்துல் ஹமீத் பிறந்த இந்த மண்ணிற்கு தலைவணங்குவதாகவும், விவசாயிகளுக்காக மிகவும் மதிப்பு வாய்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் மூலம் ஏழைகள் நிம்மதியாக தூங்கும் அதேவேளை செல்வந்தர்கள் பலர் நிம்மதியின்றி தூக்க மாத்திரையை தேடி ஓடுவதாகவும், முகத்திற்கு முன்னால் பேச தைரியமில்லாத சிலர் முதுகிற்கு பின்னால் தனக்கெதிராக பேசி வருவதாகவும் அவர் சூசகமாக விமர்சித்தார்.

Loading...

surya