எதிர் கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

share on:
Classic

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் 4ஆம் நாளான இன்றும், இரு அவைகளிலும், மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

மக்களவையில் இன்று காலை கூட்டம் தொடங்கியவுடன், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ரூபாய் நோட்டு அறிவிப்பால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

பின்னர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவாதத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் அமளி நிலவியது. இதனால், அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மதியம் 2 மணிக்கு, மக்களவை மீண்டும் தொடங்கியது. ஆனால் அவை தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் முழக்கமிடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, அவையை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைப்பதாக, துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவித்தார்.

Loading...

surya