என்டிடிவிக்கு வழக்கு விசாரணை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

share on:
Classic

என்டிடிவிக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டிசம்பர் 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பதான்கோட்டில் நடந்த தாக்குதலை என்.டி.டி.வி ஒளிபரப்பிய நிலையில், பல்வேறு விதிமீறல்கள் இருந்ததாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் என்டிடிவிக்கு ஒரு நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து என்டிடிவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.

Loading...

surya