என்.டி.டிவி ஒரு நாள் தடை தற்காலிகமாக நிறுத்திவைப்பு

share on:
Classic

என்டி டி.வி. இந்தியா தொலைக்காட்சியின் ஒளி‌பரப்புக்கு ஒருநாள் விதிக்கப்பட்ட தடை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில், கடந்த ஜனவரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, என்டி டி.வி. இந்தியா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. அப்போது, ரகசியம் காக்கப்படவேண்டிய ராணுவத் தகவல்களை, வரம்புகளை மீறி ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, வருகிற 9ஆம் தேதியன்று, அந்த தொலைக்காட்சியின் ஒரு நாள் ஒளிபரப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதனிடையே, இந்தத் தடைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் என்டி டி.வி. நிர்வாகம் மனு செய்துள்ளது. மத்திய அரசின் தடை, இந்திய அரசின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஒரு நாள் ஒளிபரப்புத் தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

Loading...

vaitheeswaran