எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சசிகலா

share on:
Classic

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10.45 மணிக்கு வந்த பொதுச் செயலாளர் சசிகலா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் எம்ஜிஆர் நூற்றாண்டு மலரை சசிகலா வெளியிட, அதனை அவைத் தலைவர் மதுசூதனன் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை சசிகலாவிடம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தின் நலிந்த தொழிலாளர்கள் 104 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் சசிகலா.

குத்துவிளக்கேற்றி எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கினை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார். எம்ஜிஆர் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் லதா வரவேற்புரை நல்குகிறார். 

மேலும் 105 பயனாளிகளுக்கு 18 லட்ச 94 ஆயிரம் ரூபாய் அளவிலான மாற்றுத்திறன் கருவிகளை வழங்கிய சசிகலாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

மருத்துவர் மோகன் காமேஷ்வரன் மாற்றுத்திறனாளிகளின் நிலையான முன்னேற்றம் குறித்து பேசிவருகிறார். எம்ஜிஆர் மக்கள் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் எனவும்  காதுகேளாத குழந்தைகளின் மறுவாழ்வு எண்ணம் எம்ஜிஆரின் மனதில் புதைந்திருந்தது, அதன் விளைவாக தமது இல்லத்தையே அவர்களின் நலவாழ்விற்காக அர்ப்பணித்தவர் என மோகன் காமேஷ்வரன் புகழாரம் சூட்டினார்.

மேலும் காது கேளாதவர்களின் மறுவாழ்வு மற்றும் அதற்கான சிகிச்சை வசதிகளில் இந்தியாவின் தலைநகரமாக சென்னை திகழ்கிறது எனவும் டிபண்டம் அறுவை சிகிச்சைகளில் ஜெயலலிதாவின் முயற்சியால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது எனவும் மோகன் காமேஷ்வரன் தெரிவித்தார்.

Loading...

jagadish