எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 36 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்

share on:
Classic

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 36 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அருகே அரபிக்கடலில் இந்திய மீனவர்கள் பலர் மீன்பிடித்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சர்வதேச எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக 36 மீனவர்கள் மற்றும் அவர்களது 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, கைதான 36 மீனவர்களையும், அங்குள்ள கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தாங்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading...

surya