வேப்பேரி பகுதியில் குற்றங்களை கண்காணிக்க CCTV கேமராக்கள் பொருத்தம்

share on:
Classic

வேப்பேரி காவல் நிலையத்திற்குட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை வேப்பேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 1768 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டவுட்டன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிசிடிவி கேமாராக்களின் இயக்கத்தை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில், சிசிடிவி கேமரா, முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகளை வேகமாக கண்டறிந்து அடுத்தடுத்த குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கும் இவை உதவுகிறது என குறிப்பிட்டார். பொதுமக்கள் ஆதரவோடு இந்த மூன்றாம் கண் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதேபோல், சென்னை அடுத்த தாம்பரத்தில், 770 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரங்கிமலை காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட சேலையூர் சரகத்தில் மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

News Counter: 
100
Loading...

aravind