ஏடிஎம் மையங்கள் முழுமையாக செயல்பட 3 வார காலம் ஆகும்

share on:
Classic

நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் முழுமையாக செயல்பட 3 வார காலம் ஆகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்களிலும், பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் பணத்தை எடுத்துச் செல்கின்றனர். ஆனால், பல ஏ.டி.எம்.களில், பணம் நிரப்பிய ஒரு சில மணிநேரத்திலேயே ரூபாய் நோட்டுகள் தீர்ந்துவிடுவதால், பொது மக்கள், பெரும் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.

அத்துடன், தற்போது ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டு, மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை நிரப்பப்படவில்லை. இதனால், அவர்கள் மிகுந்த அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர். தங்கள் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-கள் முழுமையாக செயல்பட மேலும் 3 வாரங்கள் பிடிக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடால், துணிக்கடைகள், கேளிக்கை மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள், கடற்கரைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

Loading...

surya