ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரிசையில் நின்ற ராகுல் காந்தி

share on:
Classic

டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.

டெல்லி பாராளுமன்ற தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-ல் பணம் எடுக்க நீண்ட வரிசை இருந்த போதும் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நின்றார். அப்போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசின் இந்த முடிவால் மக்கள் பெருதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் தான் மக்களோடு மக்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்ததால் அங்கு மக்கள் கூட்டமும் அதிகரித்தது. இதனால் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

Loading...

surya