ஐ.எஸ்.எல் கால்பந்து: இறுதிப்போட்டியில் கேரளா, கொல்கத்தா

share on:
Classic

மூன்றாவது ஐ.எஸ்.எல் கால்பந்து சீசனின் இறுதிப்போட்டியில் கேரளா மற்ற்யும் கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகளின் மூன்றாவது ஆண்டின் இறுதிப்போட்டி இன்று கொச்சியில் நடைபெறுகிறது. இதில் கேரளா அணி சொந்த மண்ணில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் முதலிரண்டு சீசன்களில் சாம்பியன் பட்டத்தை வென்றதையடுத்து இந்த போட்டியில் கோப்பையை வெல்ல கேரளா அணியும் 2வது முறை சாம்பியன் பட்டத்தைப் பெற கொல்கத்தா அணியும் கடுமையாக போராடும் என்பதால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

மேலும் ஏற்கெனவே முதல் சீசனில் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்த சச்சின் டெண்டுல்கரின் கேரளா அணி கங்குலியின் கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

jagadish