ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் மோதவுள்ளன | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் மோதவுள்ளன

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் மோதவுள்ளன

 ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் மோதவுள்ளன

 12 அணிகள் விளையாடி வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை 44 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இன்று நடைபெறவுள்ள 45வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 8லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ளதில் 2ல் மட்டுமே வெற்றி கண்டு 8மற்றும் 9வது இடங்களில் உள்ளன. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் கொல்கத்தா அணி, நடப்பு சீசனில் எதிர்பார்த்த அளவு சோபிக்காததால், அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அதேசமயம், சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று முன்னேற்றம் காணும் முனைப்பில் நார்த் ஈஸ்ட் அணி உள்ளது.