ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான அட்டவணை வெளியீடு

share on:
Classic

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நடப்புச் சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ள. இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த ஆட்டம் ஜூன் 4 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நடப்புச் சாம்பியனான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் களமிறங்கும் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Loading...

sankaravadivu