ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாஃப்ரிக்காவின் ரபாடா முதலிடம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாஃப்ரிக்காவின் ரபாடா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாஃப்ரிக்காவின் ரபாடா முதலிடம்

January 11, 2018 146Views
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாஃப்ரிக்காவின் ரபாடா முதலிடம்

தென்னாஃப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் போட்டி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், கேப்டவுனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாஃப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கேஜியோ ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். 887புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, 888புள்ளிகளுடன் முதல் இடத்தை எட்டிப்பிடித்தார்.

அதேபோல், பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி, 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த இடத்திறுகு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேறியுள்ளார்.