ஐசிசி பெண்கள் கிரிக்கெட் அணியில் இந்திய வீராங்கனை

share on:
Classic

இந்த ஆண்டிற்கான ஐசிசி பெண்கள் கிரிக்கெட் அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான, வீராங்கனைகளின் பேட்டிங் மற்றும் பவுலிங் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 2016 ஆம் ஆண்டிற்கான ஐசிசி பெண்கள் அணி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் மும்பையைச் சேர்ந்த 20 வயது இளம் இந்திய பேட்ஸ்வுமனான (Batswoman) ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ள இவர், 81 ரன்களையும், 23 ஒருநாள் போட்டிகளில் 701 ரன்களையும் மற்றும் 27 டி20 போட்டிகளில் 424 ரன்களையும் எடுத்துள்ளார் .

ஐசிசி பெண்கள் கிரிக்கெட் அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran