ஐ.நா. ஒப்பந்தத்தை மீறி ஆயுதங்கள் விநியோகித்த ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

share on:
Classic

ஐ.நா. ஒப்பந்தத்தை மீறி ஈரான் நடத்திய ஏவுகணை சோதனைக்கு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பொருட்களை விநியோகித்த 24க்கும் மேற்பட்ட ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மேற்காசிய பகுதியில், ஈரான் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சவுதி நாட்டு போர் கப்பல் மீது, ஈரான் அரசின் ஆதரவுடன், ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான், ஏவுகணை சோதனை நடத்த, ஐ.நா. அமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளநிலையில், அதனை மீறி, நவீன ரக ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது, அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஐ.நா. விதிமுறையை மீறி செயலாக கருதப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனவே, ஈரானுக்கு அதிகாரபூர்வமாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை தொடர்ந்தால், ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

surya