ஐபிஎல் இன்று மீளுமா குஜராத், ஜொலிக்குமா பெங்களூரு

share on:
Classic

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்கும் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இது வரை இரண்டு போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன, இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. குஜராத் அணியை பொறுத்த வரை அந்த அணி ஆறு போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும், கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. பஞ்சாப் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் தான் ஆடும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி அடைந்து 8 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. பெங்களூரு அணி இது வரை 6 போட்டடிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே கொல்கத்தா அணியை வீழ்த்த முடியும்.

Loading...

vijay