ஐ.பி.எல்: இன்று மும்பை, பஞ்சாப் அணிகள் மோதல்

share on:
Classic

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்துக் களமிறங்கவுள்ளது.

இந்தூர் ஹோல்கார் அரங்கில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பு தொடரில் 5 போட்டிகளில் களமிறங்கியுள்ள பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது. இதேபோல், மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி. ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.

மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியில் ஹாஷிம் ஆம்லா, டேவிட் மில்லர், இயான் மார்கன், வோரா, ஆரோன், தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட வீரர்களும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, பட்லர், பொல்லார்டு, ஹர்பஜன் சிங், டிம் சௌதி, மலிங்கா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் உள்ளனர். ஐபிஎல் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 18 போட்டிகளில் இரு அணிகளும் தலா 9 வெற்றிகளுடன் சம பலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish