ஐ.பி.எல்: இன்றைய போட்டியில் குஜராத், பெங்களூர் பலப்பரீட்சை

share on:
Classic

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20வது லீக் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்துக் களமிறங்கவுள்ளது.

ராஜ்கோட் சௌராஷ்ட்ரா அரங்கில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியில், ரெய்னா தலைமையிலான குஜராத் அணியை, கோலி தலைமையிலான பெங்களூரு அணி சந்திக்கிறது. நடப்பு தொடரில் 4 போட்டிகளில் களமிறங்கியுள்ள குஜராத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 7வது இடத்தில் உள்ளது.

இதேபோல், பெங்களூரு அணி இதுவரை களமிறங்கியுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடமான 8வது இடத்தில் நீடிக்கிறது. இதனால், இன்று வெற்றி பெறும் அணி அதிகபட்சமாக ஐந்தாமிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணியில் ரெய்னா, வெயின் பிராவோ (Bravo), ஃபின்ச், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், பிரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum), வெயின் ஸ்மித் ஆகியோரும், பெங்களூரு அணியில் கோலி, சாமுவேல் பத்ரீ, டி வில்லியர்ஸ், கெயில், மில்ஸ், ஷேன் வாட்ஸன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் உள்ளனர்.

Loading...

jagadish