ஐ.பி.எல்: கொல்கத்தா திரில் வெற்றி

share on:
Classic

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி ஓவர் வரை விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட் செய்தது. இதில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 39 ரன்களும், ரிஷாப் 38 ரன்களும், ஸ்ரேயாஸ் 26 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே - யூசுப் பதான் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்னர் அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதையடுத்து 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து கொல்கட்டா வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 69 ரன்களும், யூசுப் பதான் 59 ரன்களும் குவித்தனர்.

Loading...

jagadish