ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது ஐதராபாத்

share on:
Classic

ஐ.பி.எல் 10வது தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, 15 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் சுற்றின் 21வது ஆட்டம் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இடையே நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் சொற்ப ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய வில்லியம்சன், தவானுடன் சேர்ந்து நிதனமாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார்.

அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐதராபாத் அணி 191 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 89 ரன்களும், தவான் 70 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடாமல் கோட்டை விட்டது.

இதனால் கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலை உருவானது. அப்போது பந்து வீசிய சித்தார்த் கவுல் சாமர்த்தியமாக ஒரு ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே கொடுத்ததால், 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்தனர்.

Loading...

jagadish