ஒகி புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஒகி புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

ஒகி புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

December 07, 2017 130Views
ஒகி புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.

சுசீந்திரம், தடிக்காரண்கோணம், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காகவும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஆளுநர் நேற்றிரவு கன்னியாகுமரி சென்றார். 

இந்தநிலையில், இன்று காலை புயல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் கவர்னரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றது. இதனால், ஆளுநரின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.