ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

share on:
Classic

நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி கேன்பெராவில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய பேட்டிங் தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 119 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 47.2 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 262 ரன்களை எடுத்தது. இதனால் 116 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சுத் தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 9ஆம் தேதி மெல்பர்னில் நடைபெறவுள்ளது.

Loading...

jagadish