ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு

December 03, 2017 248Views
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மீனவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

முழுவதுமாக சேதமடைந்த  இடங்களை  மாவட்ட ஆட்சியர் கணக்கீடுசெய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.