கட்டப்பாவ காணோம் படத்தின் டீசர் ஆகஸ்ட் 12 வெளியாகிறது!

share on:
Classic

புவன் நல்லன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிக்கும் திரைப்படமான ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை விண்ட் சிம்ஸ் மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகிறது. ஆரம்பத்தில் தண்ணி ராஜா என்பதையே படத்தின் பெயராக வைத்திருந்தனர். ஆனால் சிபிராஜின் அப்பாவான சத்யராஜ், பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற வேடத்தில் நடிக்கவே, இந்த படத்தின் பெயர் கட்டப்பாவ காணோம் என்பதாக மாறியிருக்கிறது. சூதுகவ்வும் படத்தின் இயக்குனரான நலன் குமாரசாமியும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பதால் படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

vaitheeswaran