கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் நீக்கம்

share on:
Classic

கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பறிக்கையில், நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் விழாவை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் திருநாளன்று பணிக்கு வர வேண்டும் என உயர் அதிகாரி உத்தரவிட்டால் மறுக்காமல் பணிக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அறிவிப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் , மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Loading...

vaitheeswaran