கணவரைப் பிரிகிறாரா டிடி ?

share on:
Classic

பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்ற திவ்யதர்ஷினி விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வளம் வரும் டிடி தனது பேச்சின் மூலம் ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் உதவியாளரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களாக இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இவர் தற்போது விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது டிடி கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

News Counter: 
500
Loading...

sankaravadivu