கன்னியாகுமரியில் காணும் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

share on:
Classic

பொங்கல் விழாவின் நிறைவு நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் குடும்பம் குடும்பமாக  வந்து உணவுகளை ஒருவருக்கு  ஒருவர் உணவு பரிமாறி காணும் பொங்கலை  மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை மூன்று நாள்கள் வெகு சிறப்பாக   கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களில் குடும்பம் குடும்பமாக அவர்கள்  கொண்டு வந்த  உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும்  கடற்கரை, மற்றும் விவேகானந்தர் பாறை உள்ளிட்ட பகுதிகளின் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கடலில் குளித்தும் மேலும் காந்தி  மண்டபம், பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள்  கொண்டு வந்த உணவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து உண்டு காணும் பொங்கலை  மிகவும்  உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Loading...

surya