கபாலி ரஜினி போல போஸ் கொடுத்த தோனி

share on:
Classic

மகேந்திரசிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கபாலி ரஜினி போல போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் படம் தொடர்பாக பல்வேறு புதிய புதிய செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது படம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மகேந்திரசிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் கபாலி ரஜினி உட்கார்ந்திருக்கும் படத்தையும், அதேபோலவே தான் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து, ஒரு படமாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

Loading...

vaitheeswaran