கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் அஷ்வின்

share on:
Classic

23 முறை, ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் சாதனையை இந்திய வீரர் அஷ்வின் சமன் செய்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி ஆல்-ரவுண்டர் கபில் தேவ், 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் கபில்தேவ், 23 முறை , ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மகத்தான சாதனை புரிந்துள்ளார் .

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய ஆல்-ரவுண்டர் அஷ்வின் 23வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம், 131 போட்டிகளில் கபில் தேவ் செய்திருந்த முந்தைய சாதனையை, 43 போட்டிகளில் மட்டுமே களமிறங்கியுள்ள அஸ்வின் தற்போது சமன் செய்துள்ளார்.

Loading...

vaitheeswaran