கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட், பா.ம.க வாழ்த்து

share on:
Classic

பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருது பெற்றிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சிவாஜி கணேசனுக்குப் பிறகு இந்த விருதைப் பெறுபவர் கமல்ஹாசன் ஆவார். கடந்த 57 ஆண்டுகளாக தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் திரை உலகில் ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். செவாலியே விருதுபெறும் கமல்ஹாசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமலஹாசன் இந்த விருதை வென்றதில் வியப்புக்கு இடமில்லை. நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, அந்த படத்திற்காக ஆறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தை வென்றவர் கமலஹாசன்.

3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதை 19 முறை வென்றதுடன், இனி தமக்கு அவ்விருது வழங்க வேண்டாம் என கூறிய பெருமை, ஆசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி விருது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் என எண்ணற்ற பெருமைக்கு சொந்தக்காரரான கமலஹாசனுக்கு இது இன்னொரு விருது அவ்வளவு தான்.” என்று கூறியுள்ளார்.

Loading...

vaitheeswaran