கம்பிரின் கம்பீரம் தொடர்ந்து முதலிடத்தில்

share on:
Classic

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் 10வது சீசன் தொடர் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதுவரை நடைப்பெற்ற போட்டிகளின் முடிவில் கொல்கத்தா அணி 5 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றி, 1 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும் உள்ளது. இந்த அணிகளும் 8 புள்ளிகள் பெற்று இருந்தாலும் ரன்விகித அடிப்படையில் கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு, புனே அணிகள் உள்ளன. ரெய்னாவின் குஜராத் அணி இந்த புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த அணி 5 போட்டிகளில் பங்கேற்று 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணியே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

Loading...

vijay