கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்

share on:
Classic

நியூசிலாந்தில் தெற்கு பகுதியில் பேர்வெல் ஸ்பிலிட் கடற்கரையில் 400 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இவற்றில் நூற்றுக்கணக்கானவை இறந்துள்ளன.இந்த தீவின் தெற்கு பகுதியில், தொலைதூர கடற்கரையான பேர்வெல் ஸ்பிட் என்ற இடத்தில் பைலட் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதிங்கியுள்ளன.

இன்னும் அங்கு உயிருடன் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்களை காப்பாற்ற விலங்குகள் நல பாதுகாப்பு துறை ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக திமிங்கலங்களின் மீது வாலிகளைக் கொண்டு நீர் ஊற்றியும் ஈரத் துணிகளைக் கொண்டு கட்டியும் அவற்றை ஆழ்கடலில் விடும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Loading...

surya