கர்நாடக அரசு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

share on:
Classic

காவிரியில் தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசு, இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த மனுவில், கடத்ந பல ஆண்டுகளாக சம்பா மற்றும் குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை கர்நாடக அரசு எப்போதும் மதிப்பதில்லை என கூறப்படுள்ளது.

இதனால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் தமிழகத்துக்கு 1,045.75 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக கர்நாடக அரசுக்கு 1,434 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் இந்த இழப்பீட்டை தமிழகத்துக்கு மொத்தமாக சேர்த்து 2,500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கோரியிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள், ஒரு வாரத்தில், சாட்சியங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, நான்கு வாரங்களில், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

Loading...

surya