கறுப்பு பணத்தை தொடர்ந்து அடுத்த குறி பினாமி சொத்துக்கள் : மோடி

share on:
Classic

கறுப்புப் பணத்தைத் தொடர்ந்து, பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது பேசிய மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து விட்டதாக அறிவிப்பதற்கு 10 மாதங்களுக்கு முன்பு சிறிய குழுவை அமைத்து ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், இந்த அறிவிப்பால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்50 நாட்களுக்கு மட்டும்தான் என்றும், கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை இத்துடன் முடிந்து விடப்போவதில்லை எனவும், இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்காக தன் மனதில் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பினாமி சொத்துகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இது ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பதில் மிகப்பெரிய நடவடிக்கையாக அமையும் என்றும், பினாமி சொத்து என்பதை இந்த நாட்டின் சொத்தாகவே தான் கருதுவதாகவும், ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வது தமது கடமை என அரசாங்கம் எண்ணுவதாகவும் மோடி கூறினார்.

Loading...

surya