காங்கிரஸின் தலைவர் தேர்தல் : ராகுல் இன்று வேட்பு மனு தாக்கல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகாங்கிரஸின் தலைவர் தேர்தல் : ராகுல் இன்று வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸின் தலைவர் தேர்தல் : ராகுல் இன்று வேட்பு மனு தாக்கல்

December 04, 2017 249Views
காங்கிரஸின் தலைவர் தேர்தல் : ராகுல் இன்று வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 

அவரது மனுவை கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் முன்மொழிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னரே ராகுல் காந்தியை முன்மொழிந்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள்பட 90 பேர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அண்மைக்காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். 

இதனிடையே கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, தலைமைப் பொறுப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.