காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு பயிற்சியாளர்கள் நியமனம்

share on:
Classic

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின், 2வது சீசனில் காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு தின் யோஹானன் மற்றும் அஜய் குடுவா ஆகியோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் இன்னும் சிறிது நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு தின் யோஹானன் மற்றும் அஜய் குடுவா ஆகியோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தின் யோஹானன் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளார். தவிர, கேரள மாநிலத்திலிருந்து தேர்வாகிய முதல் வீரராவார். மேலும், கேரள சீனியர் அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார். அஜய் கேரள அணிக்காக ரஞ்சி டிராபி மற்றும் தியோதர் கோப்பை ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கேரள இருபது ஓவர் அணிக்கு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களது பயிற்சியின் கீழ் வரும் சீசனில் காஞ்சி வாரியர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அணியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Loading...

sankaravadivu