காவிரிக்கூட்டத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் - வைகோ கண்டனம்

share on:
Classic

உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி காவிரி விவகாரத்தில் கர்நடகாவில் நடத்த ஆலோசனை கூட்டத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டது கண்டனத்திற்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இன்று கன்னியாகுமரியில் காமராஜர் சிலைக்கு மாலையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி காவிரி விவகாரத்தில் கர்நடகாவில் நடத்த ஆலோசனை கூட்டத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டது பிரதமருக்கு தெரியாதா? அந்த மூன்று அமைச்சர்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கர்நாடகாவிற்கு மத்திய அரசில் உள்ள மோடி மறைமுகமாக அதரவு தெரிவித்து வருகிறார். ஒரு மாநிலத்தை வஞ்சித்து செயல்படும் துரோகத்தை அவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்” என்றார்.

லிங்கம், கன்னியாக்குமரி

Loading...

vaitheeswaran